ஞாயிறு, 1 மார்ச், 2015

கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.

கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.

அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.

ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.

ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.

பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.

63 நாயன்மார்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 

தத்துவங்கள் 96

தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா சாதனையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியவும் வரும் , யோக சாதனையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் .

ஞானேந்திறியம் - 5 
பொறி - 5 
புலன்கள் - 5 
கர்மேந்திரியம் - 5 
அந்தக்கரணம் - 4 

 ஆக
    
தத்துவங்கள் - 24 

வித்யா தத்துவம் - 7 

சிவ தத்துவம் - 5 

பிற கருவிகள் - 60 
  
மொத்தமாக 96  தத்துவங்கள் 
-------------------------------------------------------------------------------------

சற்று விரிவாக :

பூதங்கள் 5  
ஞானேந்திறியம் 5 
ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 
கன்மேந்திரியம் 5 
கன்மேந்திரிய கிரியைகள் 5 
அறிவு1 
கரணம் 4 
நாடி 10 
வாய்வு 10 
ஆசயம் 5 
கோசம் 5 
ஆதாரம் 6 
மண்டலம் 3 
மலம் 3 
தோஷம் 3 
ஈஷனை 3 
குணம் 3 
விராகம் 8 
வினை 2 
அவஸ்தை 5 

மொத்தமாக 96 

தனி தனியாக தத்துவ விளக்கம் :

பூதங்கள் 5 விளக்கம் :


1 . ஆகாயம்  : பரவெளி - நிறம் - ஸ்படிகம் , இதன் கூறுகள் : காமம் , குரோதம்                                     லோபம் , மோஹம் , மதம் ; மொத்தமாக 5 

2 . வாய்வு     :  காற்று - நிறம் - புகை , பச்சை , ஸ்படிகம் . இதன் கூறுகள் :                            இருத்தல்,நடத்தல் ,ஓடல் ,கிடத்தல் ,நிற்றல்  மொத்தமாக 5 

 3 . தேயு         :  நெருப்பு / அக்னி - நிறம் - சிகப்பு , இதன் கூறுகள் : பயம் ,                                                    அகங்காரம் , சோம்பல் , நித்திரை , மைதுனம் ; மொத்தமாக 5 

4 . அப்பு          :   ஜலம் - நிறம் - ஸ்படிக வெள்ளை . இதன் கூறுகள் : உதிரம் ,                                           மச்சை , சிறு நீர் , மூளை , சுக்கிலம் ; மொத்தமாக 5 

5 . பிருதிவி  :   மண் - நிறம் - பொன்மை . இதன் கூறுகள் : மயிர் , தோல்                                நரம்பு , எலும்பு , இறைச்சி மொத்தமாக 5 
      

ஞ்யநேந்திரியம்  5  விளக்கம் :

1 . சுரோத்திரம்  - காது சப்தங்களை கேட்கும் 

2 . த்வக்கு            - மேல் தோல் - ஸ்பரிச உணர்வு 

3 . சட்சூ                - கண் - ரூபங்களை பார்க்கும் 

4 . சிங்குவை     - நாக்கு - அறுசுவைகளை அறியும் 

5 . ஆகிரணம்     - நாசி - வாசனைகளை அறியும் 

 ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :

 1 . சப்தம்           -  செவியில் நின்று கேட்பது 

2 .  ஸ்பரிசம்    -   தேகத்தில் , சர்மத்திலிருந்து சுகமென்பதை தெரிவிக்கும் 

3 .  ரூபம்           -  கண்ணில் நின்று பல காட்சிகளை காண்பிக்கும் 

4 .  ரசம்              -  நாவில் நின்று அறுசுவையின் பேதங்களை அறிவிக்கும் 

5 . கந்தம்           -  நாசியில் இருந்து வாசனை பேதங்களை உணர்த்தும் 

கன்மேந்திரியம் 5  விளக்கம் :

1 . வாக்கு - வாய் - பேசுவது

2 . பாணி - கை - ஆட்டி அசைத்து வேலை செய்தல்


3 .  பாதம் - கால் - நடத்தல்


4 . உபஸ்த்தம் - நீர் வரும் குறி - காம சுகம் அனுபவித்தல்


5 .  குதம் - பாயுரு - ஆசனவாய்


கன்மேந்திரிய கிரியைகள் 5  விளக்கம் :

1 . வசனம் - வாயில் இருந்து பேசுவிப்பது


2 . தானம் - கையில் இருந்து கொடுப்பது


3 . கமனம் - காலில் நின்று நடத்துவிக்கும்


4 . ஆனந்தம் - லிங்கம் , யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்


5 . விசர்ஜனம் - அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்


அறிவு 1 விளக்கம் :

1 . அறிவு அல்லது உள்ளம் . இது ஆகாயத்தின் அம்சம் , ஆகையால் உச்சியில் இருந்து சகலத்தையும் செயல்விக்கும்.


நாடிகள் 10  விளக்கம் :

1 . இடகலை - வலது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி  ஏறி இடது      நாசியை பற்றி நிற்கும்

2 . பிங்கலை - இடது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்


3 . சுழுமுனை - குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து சிரசளவு முட்டி நிற்கும்


4 . சிங்குவை - உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊரவும் பானத்தை விழுங்கவும் செய்யும்


5 . புருடன் - வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்


6 . காந்தாரி - இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்

7 . அத்தி - வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்

8 . குரு - இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்

9 . அலம்புடை - கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்

10 . சங்கினி - உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்

வாயு 10 விளக்கம் :

1 . பிராணன் - மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்படி செய்யும்


2 . அபானன் - குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி , உண்ட அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்


3 . வியானன் - சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும் தவனமும் உண்டாகசெய்யும்


4 . சமானன் - சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்


5 . உதானன் - கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய , பேசக்கூடிய காரியத்தை செய்யும்


6 . நாகன் - வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்


7 . கூர்மன் - கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்


8 . கிரிதரன் - மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்


9 . தேவதத்தன் - மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல் உண்டாக்கும்


10 . தனஞ்செயன் - பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி வெடித்து போவான் , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்


ஆசயம் 5  விளக்கம் :

1 . ஆமாசயம் - அன்னம் , தண்ணீர் பருகுமிடம்


2 . ஜலாசயம் - அன்னம் , தண்ணீர் இறங்குமிடம்


3 . மலாசயம் - மலம் சேருமிடம்


4 . ஜலஞ்சயாசம் - மூத்திரம் சேருமிடம்


5 . சுக்கிலாசயம் - விந்து நிறைந்து இருக்குமிடம்


கோசங்கள் 5  விளக்கம் :





1 . அன்னமய கோசம் - ஸ்தூல சரீரத்தை அழிக்காமல் நிலைக்கசெயும் .


2 . பிராணமய கோசம் - பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விவகாரம் செய்யும்


3 . மனோமய கோசம் - மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல் படும்


4 . விஞ்ஞானமய கோசம் - புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் செயல் படும்


5 . ஆனந்த மய கோசம் - காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண , மனோமய , விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்


ஆதாரங்கள் 6 சிறு விளக்கம் :


1 . மூலாதாரம் - குதத்துக்கும் , குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம் , தேவி வல்லபை இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர் .





2 . சுவாதிஷ்டானம் - முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி





3 . மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி


4 . அனாஹதம் - ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி 



5 . விசுத்தி - கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி 


ஆக்ஞா - முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம், இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி 


அக்னி மண்டலம் 3  விளக்கம் :


1 . அக்னி மண்டலம் -  மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும் 

2 . ஆதித்த மண்டலம் - நாபியில் இருந்து கண்டம் வரை ஸ்திரம் செய்யும் 

3 . சந்திர மண்டலம் - கண்ட ஸ்தானத்தில்  இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்


மலங்கள் 3 விளக்கம் :

1 . ஆணவ மலம் - ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும்


2 . காமிய மலம் - கண்ணால் கண்டவைகளை எல்லாம் இச்சிக்கும்


3 . மாயா மலம் - தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல் , கோபம் கொள்ளல்


முப்பிணிகள் :

1 . வாதம் - வாயுவின் கோபம்


2 . பித்தம் - அக்னியின் கோபம்


3 . சிலேத்துமம் - அப்புவின் கோபம்


ஈஷணை 3 விளக்கம் :

1 . தாரேஷனை - பெண்ணாசை ( ஆணாசை ) அதிகம் கொள்ளல்


2 . புத்திரேஷனை - புத்திர , புத்திரி மீது அதிக ஆசை


3 . அர்தேஷனை - பொருள்கள் மீது அதிக ஆசை வைத்தல்


குணங்கள் 3  விளக்கம் :

1 . சாத்வீகம் - நிறம் வெண்மை , சகலரும் மதிப்பர் , அமிர்த குணம் , இதில் லயித்து இருப்பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர்


2 . ராஜஸ குணம் - நிறம் சிவப்பு , இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவம் உடன் இருப்பார்


3 . தாமச குணம் - நிறம் கருப்பு , இவர்கள் அதிக உணவு சோம்பல் , நித்திரை , மிகுந்த கோபம் எதிலும் நிலை இன்மை உடையவர் .


விரகங்கள் 8  விளக்கம் :

1 . காமம் - அதிக ஆசை கொள்ளல்


2 . குரோதம் - பகை கொள்ளல் , அன்பில்லாமை


3 . லோபம் - பிறர்க்கு ஈயாதவர் , கருமி


4 . மோகம் - பலவற்றிலும் ஆசைப்படுதல்


5 . மதம் - பிறரை மதியாதிருத்தல்


6 . மாச்சரியம் - மனதில் சதா விரோத எண்ணங்கள்


7 . இடும்பை - எல்லோரையும் உதாசீனபடுத்துதல்


8 . அஸ்சூயை - பொறாமைக்குணம்


அவஸ்த்தைகள் 5 ஸ்தானங்கள் :

1 . சாக்கிரம் - லலாடஸ்தானம் - ஆக்ன்யா சக்கரம்


2 . சொப்பனம் - கண்டஸ்தானம் - விசுத்தி சக்கரம்


3 . சுழுப்தி - ஹிருதயஸ்தானம் - அனாஹதம் சக்கரம்


4 . துரியம் - நாபிஸ்தானம் - மணிபூரகம் சக்கரம்

5 . துரியாதீதம் - குய்யஸ்தானம் - ஸ்வாதிஷ்டானம் , மூலாதாரம் சக்கரம்

மொத்தமாக 96 தத்துவங்கள் , இவை அனைத்தையும் அவர் அவர் அனுபவத்தில் உணர்ந்து அறிந்து தாண்டிய பிறகு , முக்தி என்னும் நிலைக்கு அடி எடுத்து வைக்கிறோம் .

அஷ்டாங்க விவரம்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

--------------------------------------------------


1 . இயமம்         - காமாதிகளான ஆசைகளை விடுதல் 


2 . நியமம்         - தேகாபிமானம் வராமல் செய்தல் 

3 . ஆசனம்       - 84 வகை ஆசன பயிற்சிகளால் தேகத்தை பலப்படுத்துதல் 

4 . பிராணாயாமம்  - சுவாசத்தை ஒழுங்கு படுத்துதல் , மனதை லயிக்க செய்து , மனதை அலையாமல் தடுத்தல் 

5 . பிரத்தியாகாரம் - பிற விஷயங்களை நினைவில் இருந்து நீக்குதல் 

6 . தாரணை - வேறு எண்ணங்கள் இல்லாது ஒரு இடத்தில் மனதை நிறுத்துதல் 

7 . தியானம் - இறைவன் சொரூபத்தை நாடுதல் 

8 . சமாதி - தியானத்தில் ஒளியை அடைந்து அதில் தன் மனதை நிலை நிறுத்தி ஆனந்த நிலையில் எப்போதும் இருத்தல் 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

------------------------------------------------
     

அஷ்ட கர்ம விவரம்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

--------------------------------------------------


1 . வசியம் - வாசியை வசப்படுத்துதல் 

2 . மோகனம் - கடவுளின் திருவடி மேல் மோகித்திருத்தல் 

3 . உச்சாடனம் - நித்திரை நீக்குதல் 

4 . தம்பனம் - கண் பார்வை வெளியே சிதறடிக்காமல் ஒரே நோக்கத்தில் நிறுத்துவது 

5 . வித்வேஷணம் - ஐம் பொறிகளையும் பகைத்தல் 

6 . பேதைனம்  - அகங்காரத்தை பேதித்தல்
 
7 . ஆகர்ஷணம் - பூரணத்தை ஆகர்ஷணம் செய்து கொள்ளுதல் 
 
8 . மாரணம் - வினையால் வந்த நோய்களை ஒழித்தல் 
 
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி