செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அபிதான சிந்தாமணி - விஷ்ணு


1. சோமுகாசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு செல்ல அவனைத் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மச்சாவதாரம் எடுத்து சூரனைக் கொன்று வேதங்களை கைப்பற்றி பிரம்மனிடம் கொடுத்தது.

2. இரணியாக்ஷன் பூமியைச் சுருட்டிச் செல்ல விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்று பூமியை தம் கொம்பில் தாங்கி வந்து முன்போல் நிறுத்தியவர்.

3. கூர்மவதாரம் எடுத்து பாற்கடல் கடைகையில் மந்திரமசையாது நிற்கத் தம் முதுகில் தாங்கியவர்.

4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன் பொருட்டுத் தேவரை வருத்தி இறுமாப் படைந்திருந்த இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள் புரிந்தவர்.

5. வாமன அவதாரத்தில் காசிபர்க்கு அதிதியிடம் அவதரித்து மகாபலியிடம் மூன்றடிமண் யாசித்து அவந்தர உலகமெல்லாம் ஈரடி மண்ணால் அளந்து ஓரடிக்கு இடம்

பெறாததால் அவன் தலையில் தன் கால் பதித்து பாதாளத்தில் அழுத்தி தேவர் பயம் போக்கியவர்.

6. புத்தாவதாரங்கொண்டு நாரதரை மாணுக்கராயுடன் கொண்டு சென்ற திரிபுராதிகளுக்குப் புத்தமதம் போதித்தவர்.

7. பரசுராமாவதாரத்தில் சமதக்னிக்குக் குமாரராய் அவதரித்து சூரிய வம்ச நாசஞ் செய்தவர்.

8. இராமாவதாரம் எடுத்து இராவண கும்பகர்ணாதியரை வதைத்து சீதையை சிறைமீட்டுத் தேவர்களின் இடுக்கண் போக்கியவர்.

9. பலராமாவதாரம் எடுத்து தேவகாசுரன் முதலிய அசுரரை வருத்திப் பயம் போக்கியவர்.

பிரம்மன்

ஏன் இந்து புராணங்களில் கடவுளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று புரியவில்லை. எல்லாமே கதைதான் என்பதாலா ?

1. பார்வதியாரின் திருமணத்தில் திருவிரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து பின் சிவபூசையால் நீங்கினவர்.

2. இவர் அசுவமேத யாகம் செய்யும் போது அங்கிருந்த தேவ பத்தினிகளைக் கண்டு வீரியம் வெளிப்பட்டது. அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து பிருகு, அங்கீரஸர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர், வசிட்டர் ஆகியோர் பிறந்தனர்.

3. திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக் கண்டு மயங்கி அவளை அடைய விரும்பிய போது அவள் நான்கு திக்கிலும் ஓடினாள். அத்திக்கிகளில் ஒவ்வொரு முகம் கொண்டு பார்த்தவர். அதனால் நான்முகன் என பெயர் பெற்றார்.

4. இவர் கெளரி தேவியின் திருமணம் காணச் சென்றார். அங்கே அவரது அழகில் மயங்கி காமமேலீட்டால் துன்புற்றார்.


சிவன்



1. பிரம்ம தேவனை முகத்தினும், இந்திரனை தோளினும், ஏனையோரை மற்ற உறுப்புகளினும் படைத்தவர்.

2. பிரம்மன் கர்வம் கொண்ட நேரத்தில் பைரவனை ஏவி அவனது நடுத்தலையை கிள்ளியேறிந்து அவன் வேண்டுகோளால் கபாலத்தை கையிற் பற்றியவர்.

3. இந்திரன் ஒரு காலத்தில் கர்வம் கொள்ள பூத உருவம் எடுத்து அவன் முன் சென்று கோபித்து அவனுடைய கோபத்தை கடலில் விட்டார். அது குழந்தை உருவமானது. அவனுக்குப் பெயர் சலந்திரன்.

4. பார்வதி பிராட்டியார் தன் அழகை (திரி நேத்திரங்களை) மறைத்ததால் அவர் விரல்களில் உண்டாகி பெருகிய கங்கையைத் தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப சடையில் அணிந்து கொண்டார். இதனால் கங்காதரன் என்ப் பெயர் பெற்றார்.

5. ஒரு பிரவியில் பிரம்ம தேவன் தான் படைத்த குமரியை அடைய நினைத்தார். அதனால் அவள் மான் உருவம் எடுத்து ஓடினாள். பிரம்மனும் மானுருக் கொண்டு புணரச் சென்ற போது சிவன் பிரம்மனின் தலையைக் கிள்ளியவர்.  சிவனும் வேட உருவம் எடுத்து அம்பு எய்து கொன்றார். பின் பிரம்மன் மன்னிப்பு கேட்க உயிர்ப்பித்து மணம் புணர்த்தியவர்.

6. அவந்தி நகரத்து வேதியன் தன்னைப் பெற்ற தாயைக் கூடித் தந்தையைக் கொலைபுரிந்த கொடியவன்.  அவன் முடிவில் நோயும் வறுமையும் மிகுந்து மதுரை நகரை அடைந்தானாக, அவன்பாலும் கூடல் நாயகனான சொக்கநாதப் பெருமான் கருணை கொண்டு அவன் மாபாதகம் தீர்த்தார்.

7. மதுரையில் பிறந்து வளர்ந்த தாருகவனத்து இருடிபத்னிகளை அவர்கள் ஆசைக்கிணங்க வளையலிட்டு மையல் கொண்டு புத்திரப் பேறும் அளித்தார்.

8. காம வேட்கை கொண்ட ஒரு வேதியன் ஒருவன் தாசி வீட்டிற்கு சென்று அவளை புணர்ந்தான். ஆனால் அவளுக்குத் தர பணமில்லாததால் சிவனை வேண்ட அதற்கிணங்கி தமது பதக்கத்தைத் தாசியிடம் செர உதவி செய்தார் சிவபெருமான்.

9. ஒருமுறை விஷ்ணுமூர்த்தி பாதாளத்திற்கு சென்று அங்குள்ள அப்சரஸ் தேவதைகளுடன் கூடி பல புத்திரர்களைப் பேற்றார். தம் காக்கும் தொழிலையும் மறந்தார். பிரமாதி தேவர்கள் சிவனை அணுகி காக்க வேண்டினர். உடனே சிவபெருமான் பாதாளம் சென்று விஷ்ணு புத்திரர்களுடன் போர் கொண்டு அவர்களை அழித்தார். பின் விஷ்ணுமூர்த்தியே போருக்கு வர அவரையும் கொன்று வைகுண்டத்திற்கு அனுப்பினார்.

பின் அப்சரஸ் தேவதைகள் பாதாளத்தில் இருப்பது கேட்டறிந்து மற்ற தேவர்களும் அவர்களை புணர ஆசைப்பட்டுச் சென்றனர். இதைக் கேட்ட சிவபெருமான் அப்படிச் சென்றவர்கள் உயிர் அழியும் என சாபமிட்டார்.   -  (சிவமகா புராணம்)

10. விஷ்ணுமூர்த்தியை பலமுறை சக்தியாக நினைத்து சக்தி உருவமாக பெற்று ஐயப்பனை பெற்றார்.

11. ஒருமுறை சிவன் தியானத்தில் இருக்கும் போது அவரது தேகத்தில் உண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாகியது.


சூரியன்

சூரியனின் மனைவியின் பெயர் சஞ்ஞிகை. இவள் சூரியனின் தேகத்தின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் நீங்காத துக்கத்தில் ஆழ்ந்தாள். இவர்களுக்கு பிரஜாபதி மற்றும் யமனும் யமுனை என்னும் இரட்டைப் பெண்குழந்தைகள் உண்டு.

ஒருமுறை சஞ்ஞிகை தன் தந்தையை காணும் பொருட்டு செல்லும் போது தன்னைப் போல இன்னொரு பெண்ணை உருவாக்கி சாயாதேவி என்று பெயரிட்டாள்.

கிளம்பும் போது சாயதேவியிடம் தன் கணவனுக்கு சந்தேகம் வராதபடி எல்லா சுகத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் தன் குழந்தைகளையும் பேணிகாக்க  வேண்டும் எனவும் வேண்டினாள். சாயாதேவியும் சரி என் ஏற்றுக் கொண்டாள். 

இருந்தாலும் சக்களத்தி என்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் துன்புறுத்தினாள். இதேவேளை கணவனிடம் சொல்லாமல் வந்த மகளை நீ ஒரு பெண் குதிரையாக கடவாய் என சாபமிட்டு அனுப்பினான் சஞ்ஞிகையின் தந்தை.

மூத்தவள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை காணமுடியாத யமன் கோபித்து அவளை காலால் உதைக்க அதற்கு சாயதேவி உன் கால் புழுக்கக் கடவது என சாபமிட்டாள். யமன் இதை தனது தந்தை சூரியனிடம் தெரிவித்தான். தாயின் சாபம் நீக்கலாகாது எனக்கூறி சாயாதேவியிடம் காரணம் கேட்க அவள் தன் சுயரூபம் பற்றி சொன்னாள்.

இதைக்கண்டு கோபமுற்ற சூரியன்  சஞ்ஞிகையின் தந்தையிடம் முறையிட்டான். அவர் அமைதிகொண்டால் தக்க யோசனை கூறுவதாக சொல்ல அதற்கு சம்மதித்தான்.  உனது தேக வெப்பம் தாங்க முடியாததால் அவள் இங்கு வர என்னால் குதிரை உருவம் கொண்டு உத்திரகுரு காட்டில் இருக்கிறாள் என்றான்.

சூரியனையும் தேக வெப்பத்தை குறைத்து கூடி மகிழ வசதியாக உருவம் பெற்று பின் அவனும் குதிரை உருவம் கொண்டு சஞ்ஞிகையுடன் கூடி வாழ்ந்தான். அப்போது மூக்கின் வழியே வீரியம் வெளிப்பட்டு அதனால் அஸ்வினி தேவதைகள் பிறந்தனர். (பிரம புராணம்)

இந்திரன்


1. கெளதமர் மனைவியான அகலிகையின் மேல் ஆசை கொண்டான் இந்திரன். எப்படியும் அவளை அடையவேண்டும் என ஒரு திட்டம் தீட்டினான். கெளதமர் தினமும் கங்கா ஸ்நாநத்திற்கு செல்வார் என்பதை அறிந்து கோழி கூவிவது போல் கூவினான். அதைக் கேட்டு எழுந்த கெளதமர் வீட்டை விட்டு கிளம்பினார். இந்த வேளையில் இந்திரன் கெளதமரைப் போல் உருவம் கொண்டு அவளுடன் புணர்ச்சியில் ஈடுபட்டான். அகலிகையும் இவன் தன் கணவன் அல்ல என்பதை அறிந்து கொண்டாலும் தன் அழகில் கர்வம் கொண்டவளாய் புணர சம்மதிக்கிறாள்.

கெளதமர் வருவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்த இந்திரன் மாட்டிக் கொண்டான். இருவரையும் பார்த்த கெளதமர் இந்திரனுக்கு ஆண்மையை இழக்குமாறும் பெண்களுக்குண்டான அநெக குறிகள் உடம்பு முழுவதும் வரவும், அகலிகைக்கும் காற்றை மட்டும் உணவாகக் கொண்டு, புழுதியோடு புழுதியாக கேட்பாரற்று கிடக்க வேண்டும் எனவும் ராமன் வந்து உனக்கு சாபவிமோசனம் தருவான் எனவும் சாபமிட்டார்.

தன் உடல் முழுவதும் பெண் குறிகளாகப் பெற்ற இந்திரன் நாணமடைந்து தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மற்றவருக்கு கண்களாகவும் இந்திரனுக்கு பெண்குறிகளாகவும் தரப்பெற்று தன்னுலகடைந்தவன். (இராமாயணம்)

2. தேவசன்மன் மனைவியாகிய உரிசையை அடைய இந்திரன் ஆசைப்பட்டான். ஒரு நாள் முனிவர் வெளியே செல்லும்போது விபுலன் என்ற சீடனிடம் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

முனிவர் இல்லையென்று அறிந்த இந்திரன் அவளை அடைய வந்தான். ஆசை வார்த்தைகள் பேசி தன் வசம் இழுக்கப் பார்த்தான். இதைக்கண்ட விபுலன் இந்திரனைக் கண்டித்தான். பின் இந்திரன் தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டி வெளியேறினான்.

3. ஒருமுறை சலந்திரன் ஒரு பெண்ணிடம் ஆசை கொண்டான். அதே பெண்ணிடத்தில் இந்திரனும் ஆசை கொண்டு இருவரும் கடலில் குதித்து தேடினார்கள்.

4. அரம்பையர்கள் என்பது 60 ஆயிரம் பெண்டள் உள்ள தேவலோகம். அங்கே இந்திரன் அரம்பையர்களுடன் கூடி இருக்கையில் நாரதர் வந்தார். அவரை வணங்கி இங்கிருக்கும் பெண்களில் உங்களுக்கு பணிவிடை செய்ய யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். நாரதர் வபு என்ற பெண்ணை தெர்ந்தெடுக்க அவளை அவருடன் அனுப்பி வைத்தான்.

5. இந்திரன் நளாயினி மேல் ஆசை கொண்டு அவளை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே சிவனைக் கண்டு தன் வச்சிராயுத்தால் ஓங்கி தாக்க முற்பட்டான். அப்போது சிவன் திரும்பிப் பார்க்க அதனால் இந்திரன் கையும், வலது தோளும் வாதமுற்று துக்கமடைந்தவன்.

6. இந்திராணி ஒருமுறை கொலுவில் சகல போகத்துடன் இருக்கும் இந்திரனைக் கண்டு என்னால் தான் உனக்கு இந்த போகம் வந்தது எனக் கூறினாள். அதைக்கேட்ட இந்திரன் கோபமுற்று நீ பூமியில் பெண்ணாக பிறப்பாய் என சாபமிட்டான். அதற்கு இந்திராணி நீயும் இந்த பூமியில் ஆணாக பிறப்பாய் என சாபமிட்டாள்.

பின் இருவரும் புண்ணியகீர்த்தி என்பவற்கு புத்திரன், புத்திரியாக பிறந்தனர்.

7. பாரிசாதன் மனைவி வபுஷ்டமை அடைய இந்திரன் ஆசை கொண்டான். பலவகையிலும் அடைய முற்பட்டு தோல்வி கண்டான். ஒருமுறை பாரிசாதன் அசுவமேத யாகம் செய்ய முற்பட்டான். அசுவமேத யாகம் என்பது யாக குதிரையை யாகம் நடத்துவரின் மனைவியுடன் புணரவைப்பது.

இதைக் கேள்விப்பட்ட இந்திரன் குதிரையின் உடலுக்குள் புகுந்து கொண்டான். யாக முறைப்படி குதிரை வபுஷ்டமையுடன் புணர இந்திரன் திருப்தி கொண்டான். இதனால் அசுவமேத யாகம் செயலிழந்து போனது. (சிவமகா புராணம்)

சலந்தரன்

இவன் சிவபெருமானைப் போல் உருவம் கொண்டு பார்வதியை அடைய முற்பட்டான். பார்வதி தேவி இவனது வேஷத்தை தோழிகள் மூலம் கண்டுகொண்டதால் மறைந்து கொண்டாள்.

பின் இவன் சிவனுடன் யுத்தம் செய்யும் போது தன் மாயா சக்தியால் பார்வதியாரைபோல் மாயையால் மாயா பார்வதி உருவம் கொண்டு எதிரில் கொலைசெய்து பின் சிவனால் கொல்லப்பட்டான்.

சராசந்தன்

இவன் யார் ? மகத தேசத்தின் அதிபதியான பிருகத்ரதன் மகன்.  இந்த பிருகத்ரதன் ரொம்ப நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்த வேளையில் சண்டஹௌசிக முனிவரை வேண்டினான். அப்போது தவத்திலிருந்த முனிவர் ஒரு மாம்பழம் கொடுத்து பிருகத்ரதன் மனைவியை உண்ணச் சொன்னார். அதையே மன்னனும் செய்ய, பிருகத்ரதன் மனைவியோ தன் சக்களத்திக்கும் பாதி மாம்பழம் கொடுத்தாள். இதனால் இருவருக்கும் பாதி உருவமோடு பிள்ளைகள் பிறந்தனர். இதனைக் கண்ட மன்னன் இருவரையும் ஊருக்கு வெளியே தூக்கிவீச உத்தரவிட்டான். அதன் படியே தோழியரும் செய்தனர்.

அந்த ஊரைக் காக்கும் அரக்கி சரை என்பவள் பாதி உருவம் கொண்ட குழந்தைகளை எடுத்து இணைத்து ஒரு உருவமாக்கினாள். அது உயிர் பெற்று அழத்தொடங்கியது. இதைக்கேட்ட மன்னன் அக்குழந்தையை சரையிடமிருந்து பெற்று சராசந்தன் எனப் பெயரிட்டு வளர்த்தான்.

இவன் வளர்ந்தவுடன் கிருஷ்ணனுடன் பலமுறை போர்தொடுத்து வெற்றி பெற்றுருக்கிறான். ஒருமுறை கதாயுதத்தை சுழற்றி எறிந்து கிருஷ்ணனது பாதி நாட்டை கைப்பற்றினான்.

இன்னொருமுறை இராமகிருஷ்ணருடன் போர்தொடுக்க அவர்களை எதிர்கொண்டு விரட்டினான். அவர்களும் கோமந்தபருவத்தில் ஒளிந்தனர். தேடித்தேடி அலுத்துப் போய் அருகில் உள்ள மலையைக் கொளுத்தினான். இதையறியாத இருவரும் வெளியே வர வெட்கத்துடன் தன் படைவீரர்களை எல்லாம் இழந்து திரும்பிச் சென்றனர்.

இவனிடம் கண்ணன், பீமன் மற்றும் அருச்சுணன் மூவரும் வேதியர் உருவம் எடுத்து யுத்தபிச்சை யாசித்தனர். அதற்கு இணைந்து பீமனுடன் மல்யுத்தம் செய்கையில் கண்ணன் புல்லைப் பிளந்து பீமனறிய இருபுறம் எறிந்தான். அந்த குறிப்பை உணர்ந்த பீமன் அவன் காலைகிழித்து இருபுறம் எறிந்து கொன்றான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக