திங்கள், 23 பிப்ரவரி, 2015

சிவாலய ஓட்டம்

ரிய நேரத்தில் தரி சிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்! இந்த சிவாலய ஓட்டம் எப்படி ஆரம்பித்தது? புருடாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர, வேறு இறைவனை ஏற்கமாட்டார்.

விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கி ருஷ்ணன்.
அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அந்த புருடா மிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருடா மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார். ‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருடா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு.

அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக் காணும் புருடா மிருகம், அந்த லிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன் னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் லிங்கமாக மாறும். புருடா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடும். இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனு டன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம்.

நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருடா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். புருடா மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது. இப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்குபெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்.

சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.

நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். இது ஒரு பக்தி செலுத்தும் முறை. இதனால் என்ன பயன் கிட்டுகிறது என்ற எதிர்பார்ப்பைவிட வித்தியாசமாக ஏதாவது ஒரு முறையில் இறைவழி பாட்டை மேற்கொள்ளும் பக்தி உணர்வுதான் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. ஓடி ஓடிச் சென்று வழிபடப்படும் பன்னிரு சிவாலயங்கள் யாவை?

1. திருமலை

சிவாலய ஓட்டத்தினர், திருமலை எனும் திருத்தலத்தில் உள்ள ஈசனை முதலில் வழிபடுகிறார்கள். விளவங்கோடு தாலுகாவில், குழித்துறைக்கு தெற்கே, ஆறு கி.மீ. தொலைவில் மலை உச்சியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில். மூலவர், சூலபாணி என்று போற்றப்படுகிறார். இங் குள்ள கல்வெட்டு இவரை ‘முஞ்சிறை திருமலைத்தேவர்’ என்று அழைக்கிறது.

2. திக்குறிச்சி

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது வழிபாட்டுத் தலம். சிவாலயங்களில் முக்கியத்துவம் பெறும் நந்தி, இந்தக் கோயிலில் காணக் கிடைக்காது. ஒருவேளை ஓடி ஓடி வந்து சிவ தரிசனம் பெற விழையும் பக்தர்களுக்கும், தன் ஐயனுக்கும் இடையே தான் தடையாக இருக்க அது விரும்பவில்லையோ! மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக் கருவறையில் அருள்கிறார், இந்த ஈசன்.

3. திற்பரப்பு

முக்கண்ணனை தரிசிக்க ஓடும் ஓட்டத்தில் மூன்றாவது கோயில், திற்பரப்பு. மூலவர் உக்கிரமான தோற்றத்தோடு விளங்குவதால் ஜடாதரர் என்றும் வீர பத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய ஆலயத்தில் நந்திதேவர் வடக்கு நோக்கித் திரும்பி அமைந்துள்ளார். குழித்துறைக்கு வடகி ழக்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் கோதையாற்றின் கரையில் அமைந்துள்ளது, இத்தலம்.

4. திருநந்திக்கரை

திருநந்திக்கரை நான்காவதாக வரும் ஆலயம். சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களில் முதல் நபர் இந்த ஆலயத்திற்கு வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டே இங்கு நடைபெறும் பத்துநாள் உற்சவத்திற்கான கொடியேற்றம் நிகழ்கிறது. மூலவர், நந்திகேஸ்வரர். மார்த்தாண்டத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு.

5. பொன்மனை

குலசேகரத்திலிருந்து சுருளக்கோடு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்மனை பரமன் ஆலயம். தீம்பிலேஸ்வரர் என அழைக் கப்படும் மூலவர், தீங்குகளை விரட்ட வல்லவர். முகப்பு மண்டபத்தில், நந்தி படுத்த நிலையில் காணப்படுவது வித்தியாசமானது. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் புராண நிகழ்ச்சிகளையும், நவகிரகங்களையும் மரச்சிற்பங்களாகக் காணலாம்.

6. பன்னிப்பாக்கம்

தக்கலை-சுருளக்கோடு பாதையில் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆறாவது சிவத்தலம் பன்னிப்பாக்கம். கிராத மூர்த்தியாக விளங்கும் இறைவன், தீராத வினை
களைத் தீர்த்து நற்கதி வழங்குகிறார். பைரவருக்கு இந்தக் கோயிலில் தனி சந்நதி அமைந்துள்ளது.

7. கல்குளம்

ஏழாவதாக தரிசிக்கப்படும் இந்த ஆலயம் தனிச்சிறப்பு கொண்டது. ஓட்டத்தில் இடம்பெறும் 12 சிவாலயங்களில் இங்கு மட்டும்தான் இறைவிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. இறைவன் நீலகண்ட சுவாமியாகத் திகழ்கிறார்; அம்பிகை ஆனந்த வல்லியாக அற்புதக் காட்சியருள்கிறாள். அன்னையின் தோற்றம் மதுரை மீனாட்சியை நினைவூட்டுகிறது. நாகர்கோவிலுக்கு வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம்.

8. மேலாங்கோடு

எட்டாவதாக, மேலாங்கோடு. இது, வேளிமலை என்ற பகுதிக்கு அருகில் உள்ளது. பசுமையான வயல்வெளிக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த ஆல யத்தில் ஈசன், காலகாலராக திருக்காட்சி நல்குகிறார். இத்தலத்தின் காவல் தெய்வமான இசக்கியம்மன், சிவாலயத்தின் அருகிலேயே செண்பகவல்லியா கவும் நீலாப்பிள்ளையாகவும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறாள்.

9. திருவிடைக்கோடு

பத்மனாபபுரத்தின் கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருவிடைக்கோடு. சிவாலய ஓட்டத்தில் ஒன்பதாவது ஆலயம். இடைக்காடர் எனும் சித்தரின் பெயரால் இத்தலம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மூலவர், மகாதேவர் என்று வணங்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுகள், இவரை ‘கொடம்பீஸ்வரமுடைய நாயனார்’ என்கிறது. கோயில் ஆவணங்களில், ‘சடையப்பர்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஈசனுக்குதான் எத்தனை பெயர்கள்!

10. திருவிதாங்கோடு

பத்தாவது தரிசனத் தலம், திருவிதாங்கோடு. பரிதிபாணி என்றழைக்கப்படுகிறார் இந்தக் கோயில் ஈசன். தக்கலையின் தென்மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆலயம் இது. இதன் தென் பகுதியில் கேரள பாணியில் அமைந்த ஆலயத்தில், மகா விஷ்ணுவை தரிசிக்கலாம்.

11. திருப்பன்றிக்கோடு

திருப்பன்றிக்கோடு பக்தவத்சலர் ஆலயம், பதினோராவது திருத்தலமாக விளங்குகிறது. விஷ்ணு தலம்போல பெயர் அமைந்திருந்தாலும் பக்தர்கள் இத் தல இறைவனை, திருப்பன்றிக்கோடு மகாதேவர் என்றே அழைக்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து வட மேற்கில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள் ளது இவ்வாலயம்.

12. திருநட்டாலம்

சிவாலய ஓட்டம் நிறைவு பெறும் தலம், திருநட்டாலம். நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ. தொலைவு. இங்குள்ள குளத்தின் இரு புறங்களிலும் இரு ஆலயங்கள் உள்ளன. கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருட்காட்சி வழங்குகிறார், ஈசன். எதிர்புறத்தில் உள்ள ஆலயத்தில், மகாவிஷ்ணு, சங்கரநாராயணராக அருள்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக