புதன், 25 பிப்ரவரி, 2015

தில்லையில் ஆட செய்தாய்
தினமுன்னை பாட செய்தாய்
திங்களை சிரத்தில் வைத்தாய்
தியாகத்தை அகத்தில் வைத்தாய்

எண்ணத்தில் உன்னை வைத்தாய்
ஏட்டிலே பண்ணாய் வைத்தாய்
திண்ணமும் எண்ண வைத்தாய்
தினமுன்னை தொழுக வைத்தாய்

உண்மையை உணர  செய்தாய்
உளமார உருக  செய்தாய்
அம்மையை இடையில் வைத்தாய்
அப்பரை இணங்க வைத்தாய்

காலனை நடுங்க செய்தாய்
காலமும் உணர செய்தாய்
வாசகர் உருக செய்தாய்
திருவாசகம் பெருக செய்தாய்

நஞ்சினை அகத்தில் வைத்தாய்
நவமணி கண்ணில் வைத்தாய்
ஏந்தினை மனதில் உன்னை
ஏக்கத்தில் நினைவில் வைத்தாய்

சாம்பலை பூச  செய்தாய்
சகலமும் வாசம் செய்தாய்
சடைமுடி எழிலினுள்
கங்கையை வாழ செய்தாய்

கனிதனை அருள செய்தாய்
கண்முட இருள செய்தாய்
பனிபடர் சிகரத்திலே
பரம்பொருளே வாசம் செய்தாய்

தோடுடைய செவியானே அழகு
தேனுடைய தமிழை  வைத்தாய்
மானுடைய கரத்தில் அம்பர்
மேனடைய அருளை  வைத்தாய்

செற்றுடைய இடதில் எல்லாம்
நாற்றுடைய நெல்லை வைத்தாய்
காற்றுடைய புவியில் என்றும்
கானத்தை கமழ செய்தாய்

பித்தனும் ஆனாய்
பிரம்படி பெற்றாய்
சித்தனும் ஆனாய்
சிவனடி போற்றி
அத்தனும் அடங்கிய அரும்பெருள்
கடலே
நத்தவம் கோலமே
நம சிவாயமே

- வை , நடராஜன் 




 ஓம் நாம சிவாய ,,


விறிசடையும் புலியுடையும்
விண்ணான அம்பலத்தான்
பரி களைந்து நரி பிறந்து
நாடகம்தான் ஆட்டுவித்தான்
செறியுணவும் சிறு உறக்கம்
மணம் மறந்து அனுதினமும்
அரிபெடுத்து ஓடும் ஆற்று
அடிமனலாய் கலந்திடவே

ஊன் நினைத்து உள்ளுருகி
உலகெல்லாம் பொய்யாக
மான் கரமும் மதிமுடியும்
மாதவன் தான் மெய்யாக
யானுணர்ந்த பொருளுமிங்கே
யாதுமில்லை யாருமில்லை
தேன்கலந்த மலர் அணிந்த
ஈசனின்றி பேறுமில்லை

விண்ணோரும் அறியாத
விந்தை தனை விளையாடும்
மண்ணோடு மாலும்வரை
மந்தையாய் அடி தேடி
பண்ணோடு புகழ் இசைந்து
பசி காத்து உயிர் கசிந்து
உன்னோடு உறைவிடமாய்
உமையவனே எற்றுகொள்வாய்

சதை பிண்டம் உடலெடுத்து
சாகும்வரை நெறிமறந்து
எதை எதையோ மனம் நினைத்து
எந்தனைதன் மனம் மறந்து
வதை பட்டு வாடும் மணம்
ஆசையுள் அடரும் வரை
சிதையுட்டு போகம் ஒழி
சிற்றம்பலம் தேடும் முறை

கழல் கொண்டு காலாட
உமையவளும் உடனாட
கருமேகம் இடர்புகுந்து
கதிரவனின் ஒழி படர்ந்து
ஊழ் வினையின் உடன் மறைந்து
உள் ஒளியின் நிலை அடைந்து
தாழ் பணிந்து நிற்குமெனை
தாயே காத்து ஏற்றுக்கொள்வாய்

கல் மிதந்து கரையடந்த
அப்பரின் அருந்தமிழின்
சொல்லுணர்ந்து உள்ளுறைந்து
திருக்கதவும் தான் திறந்து
பல்லுயிரும் எடுத்து வந்து
பரமன் புகழ் பாடி விட்டு
புல் இதழில் பனித்துளியாய்
பரமனிடம் கலந்திடவே

எமையாளும் எம்பெருமான்
எனையேற்று கொண்டிடுவாய்
இமை நாளும் நீர் நினைந்து
உன்னை நினைத்து உயிர் கசிந்து
சுமையான இவ்வாழ்வை
சுவையற்ற இல்வாழ்வை
உமையாண்ட நாதனே
அறுத்தெடுத்து ஏற்றுடவாய்

பாதத்தில் கழலாட
பார்வதிதான் உடனாட
வேதத்தின் மெய்ப்பொருளாம்
வேந்தனை மணம் தேட
பூதத்தின் ஐயுள்ளும்
அணுவுள்ளும் அவனாட
நாதத்தின் இசையுள்ளும்
நாதனின் கழலாட

ஊன் பெற்றேன்
உயிர் பெற்றேன்
உள்நெஞ்சின் ஊன் பெற்றேன்
யான்பெற்ற பிறவி முலும்
ஊன் இடரும் நோய் பெற்றேன்
காதல் ஆசை காமமென
கலி மலத்தில் நாரிற்றேன்
போதுமிந்த பிறவி பிணி
போகுமிடம் ஈசனிடம்
யாதுமின்றி யாருமில்லை
யாசிப்பது ஈசனடி

- வை . நடராஜன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக