புதன், 25 பிப்ரவரி, 2015

வாஸ்து விளக்கங்கள்

அன்பாலும், எளிமையாலும் எதிர்கொள்ளும்படியாகவா இருக்கிறது இவ்வாழ்வு..?

இதற்கு முன்பும் இத்தனை முன்னேற்பாடுகளோடுதான் வாழ்வை எதிர்கொண்டோமா.? போகிறபோக்கில் வாழ்வை கடக்கிற காலம் ஒன்று நமக்கு இருந்ததேயில்லையா? “எந்த நேரத்திலும, காலுக்கு கீழே பூமி பிளந்து தன்னை இழுத்துக்கொள்ளக்கூடும்” என்ற பதற்றமும, அச்ச உணர்வும் தினவாழ்வின் இயல்பாகிப்போயிற்று.

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் சுயமோகிகளாக மனித மனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தரைக்குள் அமிழ்த்தி வீழ்த்தவே மற்றவர்கள் பிறப்பெடுத்து வந்திருப்பதாக எல்லோரும் நம்புகிறோம். ஆதாரத்துடன் கைகுலுக்க நீளும் கரங்களுக்குள் ஆயுதம் துலாவுகிறோம். ஆனால் இது விரும்பிய வாழ்வில்லை, நிர்ப்பந்தம். மறுத்தால் இல்லாதொழிந்து விடுவோமோ என்ற பயத்தில், தற்காத்துக்கொள்ளலின் வெளிப்பாடு. ஓட்டத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதற்றத்தின் பக்க விளைவு. அதைத்தான் வலியது வெல்லும் எனச்சொல்லி நியாயப்படுத்திக் கொள்கிறோம்.எல்லோரையும் சந்தேகிக்கிறோம்… புரட்சி செய்வதற்கு அல்ல. பிழைத்து வாழ்வதற்கு..!

கண்ணுக்குத் தெரியாத மைதானத்தில் நிகழும் மாயப்பந்தயத்தில், யாரையோ முந்த ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போதுமே பிரச்சனைகளோடு வாழப் பழகி விட்டோமே ஒழிய, ஆற அமர்ந்து பிரச்சனைகளைத் தீர்த்து பிரச்சனை இன்றி வாழ இயலாமல் போய்விட்டது. இந்த சூழலில, நம் பிரச்சனைகளுக்கு காரணம் வாஸ்து என்றொரு அறிவியல் சார்ந்த ஓர் விஷயத்தை பேச ஆரம்பித்தால்,

வாஸ்து உண்மையில்லை …
வாஸ்து ஏமாற்றுவித்தை …
வாஸ்து பொய் …
என்று சமூக அக்கறையோடு பதிவு செய்யப்படும் குற்றச்சாட்டுகளுக்கு என் பதில்
வாஸ்து என்பது உண்மை.
வாஸ்து என்பது அறிவியல்.

வாஸ்து என்பது மத சம்பந்தப்பட்ட விஷயமில்லை. வாஸ்துவில் யந்திரம், மந்திரம், பூஜை, தாயத்து மற்றும் கண்கட்டுவித்தைகளுக்கு வேலையில்லை.

வாஸ்து விளக்கங்கள் என்றுமே அறிவியல் சார்ந்து தான் கொடுக்கப்படும் என்று அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் ” அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை” என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். பொதுவாக உலகில் உள்ள கண்டுபிடிப்புகள் அனைத்தும் இரண்டு முறைகளில் வகைப்படுத்தப்படும். முதன்மையாக

தர்க்கரீதியான முடிவு ( Logical Conclusions )

குறிப்பிட்ட கண்டுபிடிப்பை தர்க்கரீதியாகத்தான் மெய்ப்பிக்க முடியும் என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்து கொள்வோம்.

( உ . ம் )

A = B என்றும் B=C என்றும் வைத்து கொண்டால் A=C என்று மெய்ப்பிக்க முடியும்

அடுத்ததாக தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத விஷயங்களை புள்ளிவிவரங்களை (Statistics) கொண்டுதான் மெய்ப்பிக்க முடியும் / சொல்ல முடியும். இது அனுபவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு விஷயமாகும்.

இதே போன்று வாஸ்து என்பது அறிவியலே என்று தர்க்கரீதியாக அனைத்து விஷயங்களையும் மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அனைத்தையும் மெய்ப்பிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக