வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

யஜுர்வேதம் - Yagur Vetham
யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதி ஸ்ரீருத்ரம்யஜுர்வேததைத்திரீய ஸம்ஹிதை காண்டங்கள் ஏழினுள்நான்காவதில்,நடுநாயகமாக உள்ளது இதுபாதாதி கேச வர்ணனையில்,முக்கால் பகுதியில் ஹ்ருதயம் அமைவது போல11அனுவாகங்களைக் கொண்ட ருத்ர ப்ரச்னத்தில் எட்டாவதுஅனுவாகத்தில்இருதய ஸ்தானத்தில்இருப்பது சிவ பஞ்சாக்ஷரமந்திரம் மேலும் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஸ்ரீருத்ரத்தின் 11-வது அனுவாகத்தில் அமைந்துள்ளதுஇக்காரணங்களினால்,நித்திய பூஜையிலும்ஜபத்திலும்ஹோமத்திலும்தொன்றுதொட்டு ஆஸ்திகர்களால் ஸ்ரீருத்ரம் கையாளப்பட்டுவருகிறது.
ஸம்ஸாரத்தளைகளை நீக்கி முக்திக்கு வழிகாட்டுவதால் இதனைருத்ரோபனிஷத் என்றும் அழைப்பர்101 யஜுர்வேதசாகைகளிலும்வேறு பல சாகைகளிலும்ஸ்ரீருத்ரம்படிக்கப்படுவதாலும்நூற்றுக்கணக்கான வடிவங்களில்ஸ்ரீருத்ரமூர்த்தி இங்கு போற்றப்படுவதாலும்இது சதருத்ரீயம்என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ளதுமரத்தின் வேரில் ஊற்றும்நீரினால் கிளைகள் செழிப்பதுபோல்ஸ்ரீருத்ர ஜபத்தால் எல்லாதேவதைகளும் திருப்தி அடைவர் என்கிறது ஸூத ஸம்ஹிதை.ஸ்ரீருத்ரஜபமே பாவங்களுக்குச் சிறந்த ப்ராயச்சித்தமாகவும்விதிக்கப்பட்டுள்ளது.
தன் கட்டளையை மீறி நடந்தவர்களிடம் கோபம் கொண்டஈச்வரன்நம் முன் ப்ரஸன்னராக வேண்டும் என்ற ப்ரார்த்தனைஸ்ரீருத்ரத்தின் முதல் அனுவாகத்திலும்அவரது ஸர்வேச்வரத்வம்,ஸர்வசரீரத்வம்ஸர்வந்தர்யாமித்வம் முதலியவற்றைக் குறிக்கும்நாமங்களாலான போற்றிகள் 2 முதல் 9  வரையிலானஅனுவாகங்களிலும்ப்ரஸன்னரான ஈச்வரனிடம் இஷ்டப்பிராப்தி மற்றும் அனிஷ்ட நிவ்ருத்திக்கான ப்ரார்த்தனை 10-லும்,ருத்ரகணங்களுக்கு நமஸ்காரம் 11-ஆம் அனுவாகத்திலும்கூறப்படுகின்றனசமகம் என்பது வரங்களை வேண்டிச்செய்யப்படும் ப்ரார்த்தனையாகும்ஸ்ரீருத்ர பாராயணம் சமகபாராயணத்துடன் கூடித்தான் பரிபூரண பலனை அளிக்கின்றதுஎன்பது பெரியோர்கள் கூற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக