மண்ணை தின்றால் பூமி யோகம் கிடைக்கும்...!!!
ஆமாங்க..ஒரு பழைய ஜோதிட பாடல் சொல்லுது...குறிப்பிட்ட நாள் நட்சத்திரம் வரும் நாளில் கொஞ்சம் மண் அள்ளி சாப்பிட்டால் பூமி வசியம் உண்டாகுமாம்...சொந்தமாக இடம்,வீடு வாங்க போராடுபவர்களும்,ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டம்அடைந்தவர்களும் இதை முற்சித்து பார்க்கலாம்..!!
’’வித்துவான் பரணி யோனம் விசாகமோடத்த நாளில்
கருத்துட நாலங்காலில் கடகம் வந்துற்றபோது
திருத்திய சேய்நாள் மண்ணைத் தின்றிடச் செல் வழிஞ்சிப்
பொருத்தமும் புகழு முண்டாய்ப் பூமியுந் தன்னதாமே’’
பரணி,திருவோணம்,விசாகம்,அஸ்தம்,இந்த நட்சத்திரங்களில் 4 ஆம் பாதமும் ,கடக லக்னமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாளில் மண்ணைத் தின்றால் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்..என்பது இந்த பாடலின் பொருளாகும்..
சுத்தமான இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு கீழே இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து மனதில் அறுவெறுப்பு இல்லாமல் புனிதமான பிரசாதம் சாப்பிடுவது போல சாப்பிட வேண்டும்..சொந்த வீட்டு மனை இருந்தும் வீடு கட்ட முடியாமல் இருந்தால் அந்த மனையின் வடகிழக்கு மூலையில் மேல் மண்ணை நீக்கி விட்டு கீழ் மண்னில் ஒரு பிள்ளையார் செய்து அதற்கு பூஜை செய்து தீப தூபங்காட்டி வணங்கி அந்த பிள்ளையார் பிடித்த மண்ணை கொஞ்சம் சாப்பிட்டால் வீடு கட்டும் யோகம் உண்டாகும்...
நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பார்க்கலாம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக