திங்கள், 23 பிப்ரவரி, 2015

உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச மரம் என்பது ஒரு மூலிகைத் தாவரம். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இவை மருந்துப் பொருட்களாக பயன் படுத்தப் படுகின்றன. உருத்திராட்ச மரத்தின் பழமானது கடினமான ஓட்டுடன் கருநீலமாய் இருக்கும் என முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியானது புளிப்பான சாறு நிறைந்திருக்கும். மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப் படுவதால் உருவாகும் “காக்காய் வலிப்பு” என்கிற epilepsy க்கு இந்த பழத்தின் சாறு அருமருந்தாக கூறப் படுகிற்து. மேலும் cough, bronchitis, nerve pain, migraine போன்ற வியாதிகளுக்கு நல்ல பலனை தருகிறது.

ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க முடியும்

இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல், மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள் இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறமுடியும்
.
மூன்று முக மணியினை அணிவதால் ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின் பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனையுடைய்வர்களுக்கு நல்ல பலனை அளிக்குமாம்
.
நான்கு முக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த ஓட்டம் சிற்ப்பாகும்.

ஐந்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள் மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு நல்ல பலனைத் தருமாம்.

ஆறுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்

ஏழுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும் கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

எட்டுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

ஒன்பதுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி உடல் ஆரோக்கியம் மிளிரும்பத்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உறுதியான மனநலம் வாய்க்கும்.

பொதுவில் உருத்திராட்ச மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும் தன்மையுடைவை. இதனை நம் உடலில் அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என கூறப் படுகிறது. நம் துறவிகள் ஏராளமான உருத்திராட்ச மணிகளை அணிந்தன் பின்னால் இத்தகைய அறிவியல் இருந்திருக்கக் கூடும்.

நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து அந்த நீரைப் பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதைப் போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும், வாந்தி தணியுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக